Category Archives: அரசியலில்

2015 ஜனாதிபதி தேர்தலும், தமிழ் வாக்காளரும் சிவமோகன் சுமதி

z-p17-Faceless-01Presidential Election and the Tamil Voter
Sivamohan Sumathy

2015 ஜனாதிபதி தேர்தலும், தமிழ் வாக்காளரும்
சிவமோகன் சுமதி

ஆங்கிலத் துறை பேராதனை பல்கலைக் கழகம்

இந்த ஜனாதிபதித் தேர்தல் எந்த வகையில் முக்கியமானது? ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும்ää அரசாங்கத்தின் தான் தோன்றித்தனமான செயற்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோஷங்களும் இந்த முறை இடம்பெற உள்ள ஜனாதிபதித் தேர்தலினை முக்கியத்துவம் மிக்கதாக மாற்றியுள்ளன. சிறுபான்மைச் சமூகங்களினையுந்தினையும்ää முக்கியமாக சிறுபான்மைச் சமூகங்களினைச் சேர்ந்த வாக்காளரினையும் மீண்டும் ஒரு முறை அரசு தொடர்பான அரசியல் முயற்சி ஒன்றில் பங்குபற்றுவதற்கான வெளி ஒன்றினை இந்தத் தேர்தல் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

இந்த கட்டுரை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமிழ் அரசியல் பற்றியும், அரசியல் தலைமைத்துவம் பற்றியும் வடக்கு கிழக்கினைச் சேர்ந்த தமிழ் வாக்காளர் பற்றியதாகவும்ää அதிலும் குறிப்பாக வட மாகாணத்தினைச் சேர்ந்த தமிழ் வாக்காளர் பற்றியதாகவும் இருக்கும். எனது கட்டுரை மலையகத் தமிழ் வாக்காளர் பற்றியதாகவோ தென்னிலங்கையில் பாரம்பரியமாக வாழும் தமிழ் வாக்காளர் பற்றியோ பேசமாட்டாது என்பதனைக் குறிப்பிட விரும்புகிறேன். 2015ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் பின்புலத்தில் அந்தத் தேர்தலினை ஒட்டி எழுந்துள்ள சில சாத்தியக்கூறுகள் பற்றி சில பதிவுகளை நான் இங்கு மேற்கொள்கிறேன். நான் இங்கு பிரத்தியேகமாக வடக்கினைச் சேர்ந்த வாக்காளரைக் குறித்து எழுதுகிறேன். கிழக்கினைச் சேர்ந்த தமிழ் வேட்பாளரினைக் காட்டிலும் வடக்கிலே உள்ள தமிழ் வேட்பாளரின் சமூகத் தளம், அவரது கோரிக்கைகள், அரசியல் இலக்குகள் குறித்து நான் கூடுதலாக பரிச்சயமாயிருப்பதால் இந்த கட்டுரையில் என்னுடைய கவனம் வட பகுதி வேட்பாளர் குறித்ததாக இருக்கிறது. Continue reading 2015 ஜனாதிபதி தேர்தலும், தமிழ் வாக்காளரும் சிவமோகன் சுமதி

Advertisements